கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வை குழு அமைத்ததற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும். கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற நாம் கோரிக்கை வைத்தோம். அதற்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.