கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை விசாரிக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (நவ.3) சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிபிஐ, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறகு, கட்சித் தலைவர் விஜய்யும் விசாரிக்க முடிவு எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் தரப்பிலிருந்து முக்கிய ஆவணங்களை சிபிஐ, அதிகாரிகளிடம் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.