கரூர் மாவட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 19 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த நகர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 19 பேரை தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நன்றி: News18 Tamil Nadu