இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய நிலையில், பிரேவிஸ் மற்றும் கார்த்திக் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர். சிக்சர் மழை பொழிந்த கார்த்திக் சர்மா, 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்து அசத்தினார். சென்னை அணி 14.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.