திருவண்ணாமலையில் நாளை (டிச.3) கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. டிசம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரை, கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் திருவண்ணாமலை வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்காக 24 தற்காலிக பேருந்து நிலையங்கள், 130 கார் நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.