கார்த்திகை தீபம்: 15,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் 15,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது தொடர்பாக தமிழக டிஜிபியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம் நடப்பாண்டிலும் பின்பற்றப்படும் என்றும் தீப நிகழ்ச்சியை பக்தர்கள் காண கோயிலில் 26 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி