கார்த்தியின் புதிய படத்தில் இசையமைப்பாளராக இணைந்த 'தேவி ஸ்ரீ பிரசாத்'

கல்யாண் சங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஆக.2) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, ஏற்கனவே 'சிறுத்தை' உள்ளிட்ட வெற்றி படங்களில் இணைந்து பணியாற்றிய கார்த்தி-டிஎஸ்பி கூட்டணியின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕