தமிழ்நாட்டிற்கு காவிரியில் விநாடிக்கு 9,000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் இன்று (ஆக.24) வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தின் பாசன மற்றும் குடிநீர் தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த நீர் திறப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி:News18