மாணவர் சங்க தேர்தல் நடத்த கர்நாடக அரசு அனுமதி

கர்நாடகவில் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தலை நடத்த அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் அங்கு மாணவர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கல்வியாண்டும் தொடங்கப்பட்ட முதல் 5 வாரங்களுக்குள் இத்தேர்தல் நடவடிக்கைகளை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕