பள்ளிகளில் ‘ஒரே சீருடை’ திட்டத்தை கொண்டு வந்த கர்மவீரர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியின்போது, கிராமப்புறங்களில் கல்விச்சாலைகள் திறக்கப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியரிடையே சாதி, மத வேறுபாட்டை களைய 'ஒரே சீருடை' திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ் பயிற்றுமொழி திட்டத்தையும் கொண்டு வந்தவர் காமராஜரே. குலக்கல்வி முறையை ஒழித்து, சமுக நீதி, சாதி பேதமற்ற சமுதாயம் அமைய அடித்தளம் அமைத்தார். தனது ஆட்சியின்போது, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுமார் 6,000 பள்ளிக்கூடங்களை முதல்கட்டமாக திறந்தார்.

தொடர்புடைய செய்தி