குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் நிரம்பி, ஆறுகளிலும் குளங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய ஆறான குழித்துறை ஆற்றில் இன்று அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணை பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. இதனால் பொதுமக்கள் அந்தப் பகுதி வழியாக நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.