தூத்தூர்: 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்

தூத்தூர் சுனாமி காலனி பகுதியில் ரவி என்பவரின் வீட்டில் அரசு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நித்திரவிளை போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 கேன்களில் இருந்த சுமார் 1500 லிட்டர் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த மண்ணெண்ணெயை நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி