திருவட்டாறு: 88 வயது தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரியமைக்கேல் (40). இவர் மனைவியை பிரிந்து வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று 88 வயது தந்தை கபரியேல் என்பவரை ஆபாசமாக திட்டி, வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார். தந்தையையும், தட்டிக் கேட்ட சகோதரர் ஜஸ்டின் என்பவரையும் தாக்கியுள்ளார். காயமடைந்த கபரி Guல் மற்றும் ஜஸ்டின் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி