குமரி மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மலையோர கிராமங்களில் கனமழை பெய்ததால், கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகமாக ஆர்ப்பரித்து கொட்டியது. இதற்கிடையில் இன்று விடுமுறை தினம் ஆனதால் காலை முதலே திற்பரப்பு அருகில் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.
இதை அடுத்து தண்ணீர் அதிகமாக விழும் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்தது. தண்ணீர் குறைவாக வரும் பகுதியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.