திற்பரப்பு: சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை முடிவடையும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தடுப்பணை பகுதியில் இறங்கவோ, குளிக்கவோ, மது அருந்தவோ கூடாது என கடையால் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சுற்றுலாப் பயணிகளால் அப்பகுதியில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி