மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மஹா தேவர் கோயிலில் நேற்று காலை காணிக்கை பெட்டியின் பூட்டு உடைந்த நிலையில் காணப்பட்டது. மார்த்தாண்டம் போலீசார் விசாரித்ததில் பணம் ஏதும் கொள்ளை போகவில்லை. இன்று (நவ.8) பம்மம் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிய ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவரது பெயர் மனோஜ் (29) என்பதும், கோயிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், காணிக்கை பெட்டியை உடைத்தபோது கோயில் கருவறையில் உள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்டதால், பயந்து பணம் ஏதும் எடுக்காமல் ஓடியதாக கூறியுள்ளார்.