தக்கலைப் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது வீட்டில் வைத்து பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டின் எதிரில் வசித்து வரும் தாஸ் (30) என்ற வாலிபர் டியூஷன் வரும் மாணவியரிடம் ஆபாச செய்கைகளை காட்டி தினமும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவரது தொல்லை தாங்காமல் அந்த பெண் தனது வீட்டில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தினார். ஆனால் அதனை கண்டு கொள்ளாத தாஸ் மாணவிகளை பார்த்து தொடர்ந்து ஆபாச செய்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவை சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அவைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தக்கலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.