தக்கலை: பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு.. வாலிபர் கைது

அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த 76 வயதான லட்சுமி, நேற்று இரவு தனது மகன் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, அடையாளம் தெரியாத பைக் மோதி விபத்துக்குள்ளானார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய பைக்கின் நம்பர் பிளேட்டை கைப்பற்றி நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் (27) என்பவரை இன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி