குமரி மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் ரவிக்குமார் (51) என்பவரிடம், டெல்லி மல்டி பர்ப்பஸ் சொசைட்டி பைனான்ஸ் தொடங்க அனுமதி பெற்றுத்தர உதவுவதாகக் கூறி ஜெகதீஷ் (45) என்பவர் ரூ.1.75 லட்சம் பெற்றுள்ளார். அனுமதி பெற்றுத் தராததால், பணம் மோசடி செய்ததாக ரவிக்குமார் தக்கலை காவல் நிலையத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, தவெக பிரமுகரான ஜெகதீஷை தக்கலை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.