வெள்ளிச்சந்தை: பைக் - கார் மோதல் தொழிலாளி படுகாயம்

மணவாளக்குறிச்சி அருகே கன்னி விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சிங் (55). கூலித் தொழிலாளி. நேற்று (டிச.28) இவர் தனது பைக்கில் கன்னி விளைச் சாலையின் இடது புறம் செல்வதற்காகச் சாலையோரம் நின்றுகொண்டிருந்தார். 

அப்போது பிள்ளையார் கோவில் - இரணியல் சாலையில் வேகமாக ஒரு கார் வந்தது. அந்தக் கார் ஹார்ன் அடிக்காமல் வந்து ஜெய்சிங் நின்ற பைக் மீது மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்டு ஜெய்சிங் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தப் பகுதியிலுள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி