பேச்சிப்பாறை: டெம்போ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

பேச்சிப்பாறை பழங்குடியினர் கிராமப் பகுதியில் இருந்து நேற்று மாலை ரப்பர் தடிகளை ஏற்றிக்கொண்டு வந்த டெம்போ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன டிரைவர் அஜில்குமார் (44) படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பேச்சிப்பாறை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி