நாகர்கோவில்: நகைக்கடையில் கொள்ளை.. 5 பேர் கைது

நாகர்கோவிலில் உள்ள சரஸ்வதி ஜூவல்லரியில் கொள்ளையடித்ததாகக் கூறப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் 100 பவுன் தங்கம், 500 கிராம் வெள்ளி திருடப்பட்டதாக உரிமையாளர் புகார் அளித்திருந்தார். ஆனால், காவல்துறையின் விசாரணையில் திருடப்பட்ட நகைகள் பெரும்பாலும் கவரிங் என தெரியவந்தது. இதனால், பொய் புகார் அளித்ததாக நகைக்கடை உரிமையாளர் அன்பையா (42) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 கிராம் தங்கம், 500 கிராம் வெள்ளி மற்றும் கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி