அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் , நாகர்கோவில் கோட்டார் பகுதியிலுள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் , வீடு திரும்ப வில்லை. இது குறித்து
கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபர் நேற்று மாலை இளம் பெண் ஒருவருடன், கோட்டார் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.