முளகுமூடு: மூதாட்டியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

முளகுமூடு அருகே கூட்டமாவு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் பாபு மனைவி மேரி ஸ்டெல்லா (61). இவர் தனது தோட்டத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த லூகாஸ் என்பவருடைய வீட்டின் வழியே சென்று வருவது வழக்கம். இதனால் மேரி ஸ்டெல்லாவுக்கும் லூகாஸ் மனைவி வல்சலா (50) என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் நேற்று (ஜூன் 4) மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வல்சலா கல்லால் மேரி ஸ்டெல்லாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்தவர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேரி ஸ்டெல்லா தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் வல்சலா அவரது கணவர் லூகாஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி