மார்த்தாண்டம்: போலீஸ் பாதுகாப்புடன் வர்த்தகர் சங்கக் கூட்டம்

மார்த்தாண்டத்தில் தொழில் வர்த்தகர் சங்கத்தில் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழுவில் உள்ள செயலாளர் சுரேஷ் குமார் என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் துணைச் செயலாளர், செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று வர்த்தகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. 

பரபரப்பான சூழ்நிலையில் மார்த்தாண்டம் போலீசார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநிலத் தலைவர் விக்கிரமசிங்கராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி