தற்போது கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வள கடத்தல் நடந்து வருகிறது. அதுவும் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியே இரவில் கனரக கனிமவள லாரிகள் சிட்டாய் பறந்து வருகிறது. பகலில் கனிமவள லாரிகள் மேம்பாலத்தில் செல்ல தடை என்று கூறி போக்குவரத்து போலீசாரையும் நிறுத்தி கனிம வள லாரிகள் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்ல வைத்து வருகின்றனர். ஆனால் இரவில் கனிமவள லாரிகள் மேம்பாலத்தில் கனிம வளங்களுடன் தங்கு தடையின்றி சென்று வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?