அப்போது அந்த வழியாக பின்னால் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் அடைந்த ராகுலை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து ராகுல் தாயார் ஜெயந்தி என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் (59) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.