மார்த்தாண்டம்: கடத்தல் வாகனத்தை துரத்திய பெண் அதிகாரி

மார்த்தாண்டம் பகுதியில் நேற்று இரவு குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு பெண் தனிதாசில்தார் பாரதி என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்த முயன்றார். வாகனம் நிற்காமல் வேகமாக சென்றது. உடனடியாக வாகனத்தை பின்னால் துரத்திச் சென்றனர். ஆனால் கடத்தல் வாகனத்தின் பக்கத்தில் பைக்கில் ஒரு நபர் பாதுகாப்புக்காகச் சென்று கொண்டிருந்தார். 

இதனால் அதிகாரிகளால் அந்த வாகனத்தை முந்திச் சென்று பிடிக்க முடியவில்லை. சுமார் 15 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றும் பிடிக்க முடியாத நிலையில், சொகுசு கார் திடீரென கேரளப் பகுதியில் நுழைந்து மாயமானது. இதுகுறித்து தாசில்தார் விசாரித்து வருகின்ற நிலையில், இன்று காலை முதல் கடத்தல் வாகனத்தைத் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி