இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வின்ஸ் விஜயன் புதிதாக கட்டி வரும் வீட்டிற்குச் செல்வதாக விட்டுப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் மறுநாள் (நேற்று) மாலை நேரமான பிறகும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மனைவி சரண்யா புதிதாக கட்டிய வீட்டிற்குச் சென்று பார்த்தார். அப்போது அங்கு தூக்கிட்டு விஜயன் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார். அக்கம் பக்கத்தில் உதவியுடன் அவரை மீட்டுச் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த போது வின்ஸ் விஜயன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் இன்று (3-ம் தேதி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.