மார்த்தாண்டம் ஞாறாம்விளை பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (32), வங்கியில் காசாளராகப் பணியாற்றி வந்தார். பணியிட மாறுதல் கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவியின் புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் உடலைக் கைப்பற்றி, குழித்துறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.