மார்த்தாண்டம்: வீட்டுக்குள் பதுங்கிய நல்ல பாம்பு பிடிபட்டது

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி கிராமத்தில் ராஜன் என்பவரது வீட்டில், குளிர்சாதனப் பெட்டியின் அடியில் கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பு காணப்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து குழித்துறை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பைப் பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி