மார்த்தாண்டம்: ரேஷன் அரிசி கடத்தல்; காரை மடக்கி பிடித்த அதிகாரிகள்

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான குழுவினர் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான காரை துரத்தி சென்று திருத்துவபுரம் பகுதியில் அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். காரில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனை கேரளா கடத்திச் செல்ல முயன்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு வாணிப கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனர். கார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி