குழித்துறை பகுதியில் உள்ள மார்த்தாண்டன்விளை பத்ரேஷ்வரி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் இறுதி நாளில், ஏராளமான பக்தர்கள் அம்மனுக்குப் புதுப்பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவின்போது, அம்மன் அருள் வந்து ஆடிய இரண்டு பெண் பக்தர்கள், பச்சிளம் குழந்தைகளைத் தலைமேல் தூக்கி ஆடியதோடு, கொதிக்கும் மஞ்சள் நீரை உடலில் தெளித்து பக்தர்களைப் பரவசப்படுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.