குமரி: போலீஸ் நிலையத்தில் பெண் காவலரை தாக்கிய பெண்

களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ஜோஸ்பின் (38) என்பவர், களியக்காவிளை காவல் நிலையத்திற்குச் சென்று பெண் போலீஸ் வனிதாவிடம் (35) வழக்குகளை முடித்துத் தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். உயர் அதிகாரிகளிடம் கேளுங்கள் என வனிதா கூறியபோது, ஜோஸ்பின் தனது கிளிப்பால் வனிதாவின் கையை கிழித்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து வனிதா அளித்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி