குமரி: 4 வழி சாலை பாலம் அடியில் தேங்கிய மழை நீர்

குமரியில் பெய்து வரும் கனமழையால் களியங்காடு பகுதியில் 4 வழிச்சாலை பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கல்லூரிகள் அருகில் இருப்பதால் மாணவ மாணவிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். சாலையில் செல்லும் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி