இந்த நிலையில் இன்று(அக்.31) முதல் மீண்டும் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. திற்பரப்பு அருவியில் கடந்த ஐந்து நாட்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இன்று தீபாவளி ஆன காரணத்தினால் காலை முதலே வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர் வந்து குவிய தொடங்கினர்.
ஆனால் அடுவியல் யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. இன்று 6 வது நாளாகவும் திற்பரப்பருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க பட்டிருந்தது.