குமரி மாவட்டம் தேரேகால்புதூர் பகுதியில் ஒரு வீட்டு முன்பு பச்சிளம் குழந்தை பிணம் கிடந்தது. சுசீந்திரம் போலீசார் விசாரித்ததில், வீட்டில் வசிக்கும் 23 வயது நர்ஸ், தனது அக்கா கணவர் மதன்குமார் (43) உடனான கள்ளக்காதலில் கர்ப்பம் தரித்ததாகவும், வெளியே தெரிந்தால் அசிங்கம் என குழந்தையை வீசியதாகவும் கூறினார். போலீசார் நர்ஸ் மற்றும் மதன்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.