கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மஹா சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று (பிப்ரவரி 15) ஞாயிற்றுக்கிழமை என்பதால் கேரளா, தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். 12 கோயில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கத்தை விட பெண் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மஹா சிவராத்திரியைத் தொடர்ந்து இன்று இரவு முழுவதும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.