குமரி: 1500 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையில் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்ட குழுவினர் நேற்று மேல்புறம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நிற்காமல் சென்ற காரை அதிகாரிகள் துரத்திப் பிடித்து, நெட்டா பகுதியில் மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி காப்புக்காடு அரசு நுகர்வோர் கிட்டங்கிலும், வாகனம் விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி