குலசேகரம் பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முருகன் அவர்களின் மகன் சுஜித்குமார், விசாகப்பட்டினத்தில் சட்டப் படிப்பு படித்து வந்தார். கடந்த 9-ம் தேதி விழுப்புரத்தில் பேருந்தில் வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பாண்டிச்சேரி ஜிம்மர் மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.