இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ எரிந்து கொண்டிருந்த பைக் மற்றும் காரை தண்ணீரை அடித்து அணைத்தனர். எனினும் தீயில் கருகி பைக் முற்றிலும் சேதமடைந்தது. காரின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. நேற்று காலை குளச்சல் போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. தடயவியல் நிபுணர்கள் வர உள்ளனர். அவர்கள் வந்த பிறகு தீ பிடித்ததற்கான முழு விவரம் தெரியவரும். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி
விஜய் எந்த தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பில்லை - நயினார்