குழித்துறை: பைக் திருடனை போலீசார் கைது செய்தனர்

திருவனந்தபுரம் மாவட்டம் ஶ்ரீ விசாரம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் சந்திரன் (35) என்பவர் வெல்டிங் வேலை செய்து வந்த நிலையில், இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் குழித்துறையில் ஒரு வீட்டில் இருந்து பைக் திருடியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. களியக்காவிளை போலீசார் அவரை இன்று கைது செய்து, திருடப்பட்ட பைக்கை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி