குழித்துறை: நீதிமன்றம் அருகே வக்கீல்கள் சாலை மறியல்

குழித்துறை தாலுகா அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் செப்டிக் டேங்க் நிரம்பி கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் சாலை வழியாக பாய்ந்து செல்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கம் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதை சீரமைக்க வலியுறுத்தி குழித்துறை வக்கீல் சங்கம் சார்பில் இன்று (ஜூலை 31) நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் முன்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் சங்க தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி