இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றிய பீட்டர் ஜான்சன் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் நிதியுதவியினை அறிவித்தார். ரூ.10 இலட்சத்துக்கான காசோலையை இன்று பீட்டர் ஜான்சன் மனைவியிடம் வழங்கினர்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அழகு மீனா வழங்கினர். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.