குழித்துறை: நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்; வேலை நிறுத்தம்

குழித்துறை நகராட்சியில் தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை கொண்ட பல்வேறு வரி இனங்கள் நீண்ட காலமாக நிலுவைத் தொகை வைத்திருப்பவர்கள் கடை மற்றும் வீடுகளுக்குச் சென்று நகராட்சி ஊழியர்கள் வரி வசூல் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நகராட்சி வருவாய் உதவியாளர் லட்சுமணன் என்பவர் 3-ம் வார்டு படப்பரை என்ற பகுதியில் நிலுவைத் தொகை வைத்திருக்கும் நபர்கள் வீடுகளில் சென்று வரியை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாலையன் என்பவர் வீட்டில் சென்றபோது அவர் தகாத வார்த்தைகள் பேசி லட்சுமணனை தாக்கியதில் அவர் காயமடைந்து, குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

இதைக் கண்டித்து நகராட்சி ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, இன்று 3-ம் தேதி காலை நகராட்சி அலுவலகத்தில் முன்பு திரண்டு வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் காலை முதல் முக்கிய பகுதிகளில் தேங்கிய குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் நகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி