கொல்லங்கோடு:   பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

கொல்லங்கோடு அருகே மணலி என்ற இடத்தை சேர்ந்தவர் மரிய செல்வி (53). இவர் கடந்த 29ஆம் தேதி காலை அந்த பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கில் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். அந்த நேரம் மழை பெய்ததால் பைக்கில் இருந்த படியே தனது குடையை விரித்துள்ளார். 

இதில் நிலை தடுமாறிய மரிய செல்வி பைக்கிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி