இதனால் திருவனந்தபுரம் செல்லாமல் கோபித்துக் கொண்டு காரில் இருந்து இறங்கி வீட்டு மாடியில் உள்ள அறையில் படுத்துக்கொண்டார். இதுபோல் கோபித்துக் கொண்டு மாடியில் அறையில் சென்று ஸ்டெபின் படுத்துக்கொள்வது வழக்கமாகும். இந்த நிலையில் மதியம் வேலைக்கு போன சைஜூ வீட்டுக்கு சாப்பிட வந்த போது மாடியில் சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஸ்டெபின் கிடந்துள்ளார். உடனடியாக மகனை மீட்டு கொல்லங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். கொல்லங்கோடு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி