ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும், 2025 ஜூன் 11முதல் 20 வரை இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று கொல்லங்கோடு, கண்ணநாகம் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தங்க மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர். செல்ல சுவாமி துவக்கி வைத்தார். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.