வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் லியோன் (57). மீனவரான இவர் உடல்நல குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (ஜூலை 4) இரவு லியோன் வழக்கம் போல தனது அறையில் உறங்க சென்றார். நேற்று காலையில் மனைவி ஷெர்லி (47) பார்த்தபோது லியோன் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
பின்னர் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் லியோன் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.