கிள்ளியூர் கிழக்கு வட்டார மார்க்சிஸ்ட் கட்சி கமிட்டி சார்பாக கருங்கலில் கண்டன தர்ணா போராட்டம் இன்று மாலையில் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தி அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்விற்கு காரணமான மத்திய பிஜேபி அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் வட்டார செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆட்டோசங்க மாவட்ட செயலாளர் சோபனராஜ் தொடங்கிவைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் முடித்து வைத்து பேசினார்.